RK நகர் வழக்கு : ஆவணங்களை வெளியிடவில்லை என வருமான வரித்துறை மறுப்பு 

Classic

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட எந்த ஆவணத்தையும் வெளியிடவில்லை என வருமானவரித்துறை குறிப்பிட்டுள்ளது

ஆர்.கே நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி,  திமுக வேட்பாளர் மருது கணேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கில், வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் மற்றும் தலைமை இயக்குநர் சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு  ஏப்ரல் மாதம் 7ம் தேதி அன்று அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 4,71,00,000 பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அது தொடர்பாக, ஏப்ரல் 9ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் ரகசியமானவை எனவும்; அதனை பொது வெளியில் வெளியிடவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பான விவரங்களை வெளியிட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறிய புகாருக்கு வருமான வரித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும்,  2012 முதல் 2017 ஆண்டு வரை வருமான வரித்துறை பறிமுதல் செய்த ஆவணங்களை மதிப்பீடு செய்ய வரும் டிசம்பர் 31 வரை தங்களுக்கு அவகாசம் உள்ளதாகவும் வருமான வரித்துறை தனது அறிக்கை மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind