ஆரணி எம்.பி. செஞ்சி ஏழுமலையிடம் வருமான வரித்துறையினர் விசாரணை

share on:
Classic

ஆரணி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் செஞ்சி.ஏழுமலை 20 லட்சம் ரூபாய் பணம் கொண்டு வந்தது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

செஞ்சி.ஏழுமலை டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னைக்கு வந்துள்ளார். அப்போது அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. சோதனையில் அவர் 20 லட்சம் ரூபாய் பணம் கொண்டு வந்ததாக தெரியவந்துள்ளது. அந்தப் பணம் தனது மகளின் கல்வி செலவுக்காக எடுத்து வந்தது என ஏழுமலை தரப்பிலிருந்து ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

News Counter: 
100
Loading...

aravind