நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பங்குச் சந்தைகள் உயர்வு

Classic

நாடாளுமன்றத்தில் நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பங்குச் சந்தைகள் உயர்வுடன் நிறைவடைந்தன.

பாரதிய ஜனதா ஆட்சியின் 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில், பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவடைந்துள்ளது. பங்குவர்த்தகம் இன்று காலை உயர்வுடனேயே தொடங்கியது. வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 665 புள்ளிகள் உயர்ந்து, 36 ஆயிரத்து 256 புள்ளிகளில் நிறைவடைந்தது. இதேபோன்று தேசிய பங்குச் சந்தை நிஃப்டி, 179 புள்ளிகள் உயர்ந்து, 10,830 புள்ளிகளில் நிறைகொண்டது.

News Counter: 
100
Loading...

aravind