சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!!

share on:
Classic

வேலூரில் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் அனல் காற்று வீசுவதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

வேலூர், காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில தினங்களாக கோடை வெப்பத்தினால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் வெயிலிலிருந்து தற்காத்துக்கொள்ள கொடை பிடித்துக் கொண்டும், முகத்தை மூடிக்கொண்டும் மரத்தின் நிழலை தேடி பொதுமக்கள் அலைகின்றனர். மேலும் வெயிலின் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ள மோர், தர்பூசணி பழங்கள், கரும்புச்சாறு, நுங்கு, உள்ளிட்ட பழங்களையும், குளிர்பானங்களையும் அருந்துகின்றனர். இந்நிலையில் அனல் காற்று மற்றும் வெயிலின் தாகத்தால் பொதுமக்கள் சாலைகளில் செல்லக்கூட தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வேலூர் அண்ணா சாலை, பெங்களூர், ஆற்காடு, காட்பாடி உள்ளிட்ட சாலை பகுதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. வேலூரில் சமீபகாலமாக 107 டிகிரி வெயில் கொடுமையில் மக்கள் பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பால் பொதுமக்கள் பல்வேறு வகையிலான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.

News Counter: 
100
Loading...

vinoth