பயிற்சி ஆட்டத்தில் பந்து வீசி அசத்திய விராட் கோலி... ஆஸ்திரேலியாவில் ரசிகர் ஆரவாரம்

share on:
விராட் கோலி, ஆஸ்திரேலியா, டெஸ்ட் கிரிக்கெட், Test Cricket, Virat Kolhi, Australia
Classic

ஆஸ்திரேலியா XI அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி பந்து வீசியதை ரசிகர்கள் கைதட்டி ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. அதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது. 

இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா XI அணியுடன் இந்திய அணி 4 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் ஆடி வருகிறது. இதில் முதல் டெஸ்டில் இந்திய அணி 358 ரன்கள் குவித்தது. அடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் முடிவில் 356 ரன்களுக்கு 6 விக்கெட்கள் இழந்துள்ளது.

இந்த போட்டியில் பந்து வீசிய ஷமி 3 விக்கெட்களும், உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி உள்ளனர். இந்தப் போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் பந்துவீசினார். 2 ஓவர்கள் பந்து வீசிய கோலி 6 ரன்கள் கொடுத்தார். விராட் கோலி பந்து வீசியதை பார்த்த அவரது ரசிகர்கள் கைத்தட்டியும், உற்சாக குரல் எழுப்பியும் ஆரவாரத்தில் ஈடுப்பட்டனர்.

News Counter: 
100
Loading...

vijay