இந்திய வீரர் புஜாரா சதம் விளாசி அபாரம்

share on:
Classic

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர் புஜாராவின் அபார சதத்தால், இந்திய அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்களை குவித்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா தும் கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டி, சிட்னியில் தொடங்கியுள்ளது. இப்போட்டியில், டாஸ் வென்ற கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு அகர்வாலும், ராகுலும் தொடக்கம் அளித்தனர். ஆஸ்திரேலிய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய ராகுல், 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பின்னர், அகர்வாலுடன் இணைந்த புஜாரா, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இவ்விருவரும் 2-வது விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு 116 ரன்கள் சேர்த்த நிலையில், அரைசதம் விளாசி அசத்திய அகர்வால் 77 ரன்களுடன் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். கேப்டன் கோலி, ரஹானே ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா, தனது 18-வது சதத்தை பதிவு செய்தார். இந்த தொடரில் அவர் அடிக்கும் 3-வது சதம் இதுவாகும்.தொடர்ந்து, புஜாரா - விஹாரி ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, முதல்நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 130 ரன்களுடனும், விஹாரி 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 
 

News Counter: 
100
Loading...

aravind