கோலியை சமாளிக்க ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு ரிக்கி பாண்டிங் கொடுத்த டிப்ஸ்

share on:
கிரிக்கெட், விராட் கோலி, ரிக்கி பாண்டிங், ஆஸ்திரேலியா, Virat Kolhi, Australi, Cricket, Test
Classic

இந்திய - ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான முதல் ஒரு டெஸ்ட் போட்டி வருகிற 6ம் தேதி அடிலெய்டு மைதானத்தில் தொடங்க உள்ளது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்டதொடரில் விளையாட உள்ளது. இதற்கு முன் நடந்த டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. 

இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை சமாளிப்பது எப்படி என்பதே ஆஸ்திரேலிய அணியின் மிகப்பெரிய சவாலாக உள்ளது. அவர் ரன்வேட்டையில் இறங்கி விட்டால் எதிரணியின் பந்துவீச்சை சுலபமாக சிதறடித்து விடுவார்.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கோலியை சமாளிக்க ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு சில அறிவுரைகளை கூறி உள்ளார். விராட் கோலியை ஆரம்பம் முதலே ரன் சேகரிக்காமல் தடுக்க வேண்டும். அவரை கண்டு யாரும் அச்சப்பட வேண்டாம். 

உள்ளூர் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி விளையாடுவதால் ஆக்ரேஷமாக விளையாடினால் மட்டுமே வெற்றி பெற முடியும். கோலியை அதிகமாக பவுண்டரி அடிக்க விட்டு விட்டால் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடுவார். 

நான் கேப்டனாக இருந்த போது 2014-15ம் ஆண்டு நடைப்பெற்ற டெஸ்ட் தொடரின் போது விராட் கோலி அதிக ரன்களை குவித்தார். ஆனால் அந்த தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தினால் மட்டுமே இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல முடியும் என்று தெரிவித்தார்.
 

News Counter: 
100
Loading...

vijay