நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி

share on:
Classic

நியூசிலாந்துக்கு எதிரான 5 வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணிகளுக்கு எதிராக 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நடைபெற்று முடிந்த  4 ஒருநாள் போட்டியில் 3 க்கு ஒன்று என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிப்பதுடன், தொடரையும் கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 5 வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டிக்கான இந்திய அணியில், 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கார்த்திக், குல்தீப் யாதவ், கலீலுக்கு பதிலாக தோனி, விஜய்சங்கர் மற்றும் முகமது சமி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

News Counter: 
100
Loading...

aravind