நியூசிலாந்து அணியில் தோனியா.?

share on:
Classic

நியூசிலாந்து அணியில் தோனியா.?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 239 ரன்கள் சேர்த்து தனது இன்னிங்ஸை நிறைவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ராகுல் - ரோஹித் தலா ஒரு ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளிக்க அவரை தொடர்ந்து வந்த கோலியும் ஒரு ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தோனி-ஜடேஜா நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதில் நம்பிக்கையூட்டும் விதமாக அதிரடியாக ஆடிய ஜடேஜா 4 சிக்ஸ்ர் 4 பவுண்டரி உட்பட 59 பந்துகளுக்கு 77 ரன்கள் குவித்து வெளியேறினார். அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்பட்ட தோனி எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். இந்நிலையில் 49.3 ஓவரில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கு மிக அருகில் சென்று இந்திய அணி தோல்வியடைந்தது.

இந்த வெற்றிக்கு பின் நியூசிலாந்து அணி கேப்டன் கேன்வில்லியம்சன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் தோனி மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன, இந்த சூழ்நிலையில் உங்கள் அணியில் தோனியை இணைத்து கொள்வீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த வில்லியம்சன் தோனி உலக தரம் வாய்ந்த வீரர். மோசமான ஆட்டத்தையும் வெற்றிக்கு எடுத்து செல்லும் திறமை உள்ளவர். இந்த தொடர் முழுவது அவர் தனது சிறப்பான பங்களிப்பை அணிக்கு அளித்துள்ளார். அவர் இப்போது அவர் இந்திய குடியுரிமையுடன் உள்ளதால் அவர் சட்ட ரீதியாக நியூசிலாந்து அணிக்காக விளையாட முடியாது. அவர் இந்திய குடியுரிமையை மாற்றி நியூசிலாந்து குடியுரிமை பெற்றால் அவரை நியூசிலாந்து அணியில் விளையாட வைப்போம் என நகைச்சுவை கலந்து பதிலளித்தார்.
 

News Counter: 
100
Loading...

Saravanan