சோதனையிலும் சாதனை படைத்த இந்திய அணி..!

share on:
Classic

சோதனையிலும் சாதனை படைத்த இந்திய அணி..!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. மழையின் காரணமாக நேற்றைய ஆட்டம் நிறுத்தப்பட்டு இன்றைக்கு (புதன் கிழமை) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 239 ரன்கள் சேர்த்து தனது இன்னிங்ஸை நிறைவு செய்தது 

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ராகுல் - ரோஹித் தலா ஒரு ர்ன்னில் வெளியேறி அதிர்ச்சி அளிக்க அவரை தொடர்ந்து வந்த கோலியும் ஒரு ரன்னில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 25 பந்துகளுக்கு 6 ரன்கள் மட்டுமே சேர்த்து வெளியேறினார். இதன் மூலம் பவர் பிளே-இல் ( முதல் பத்து ஓவர்) 24 ரன்கள் சேர்த்து நடப்பு உலகக்கோப்பையில் தொடரில் பவர் பிளே ஓவரில் மிக குறைந்த ரன் சேர்த்த அணி என்ற மோசமான சாதனையை இந்திய அணி தன் வசமாக்கியுள்ளது.

News Counter: 
100
Loading...

Saravanan