உலகக்கோப்பை : அரையிறுதி போட்டி நாளை தொடரும்..!

share on:
Classic

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டி மழை காரணமாக நாளை (புதன்கிழமை) நடைபெறும், என அறிவிக்கப்பட்டுள்ளது. 

உலகக்கோப்பை போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா, நியூஸிலாந்து அணிகள் இடயேயான முதல் அரையிறுதி போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் தொடக்கம் முதல் நியூஸிலாந்து வீரர்கள் ரன் சேர்க்க திணறினர்.

இந்த நிலையில் 46.1 ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால் ஆட்டத்தை தொடங்க முடியாது என நடுவர்கள் அறிவித்தனர். இதனால், இந்த ஆட்டம் நாளைய தினத்துக்கு (புதன் கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

இந்திய நேரப்படி பிற்பகல் 3.00 மணிக்கு நாளை தொடங்கவுள்ளது. அப்போது, நியூஸிலாந்து அணி மீதமுள்ள 23 பந்துகளை எதிர்கொள்ளும்.

New Zealand finished the day 211/5 before rain spoiled the party after 46.1 overs with play to resume at 10:30am (BST) tomorrow.

Watch all the highlights so far #BACKTHEBLACKCAPS | #TeamIndia | #CWC19 pic.twitter.com/9sXskhGAOD

— ICC (@ICC) July 9, 2019

News Counter: 
100
Loading...

Saravanan