மழையால் தடைபட்ட அரையிறுதி போட்டி..!

share on:
Classic

நியூஸிலாந்து, இந்திய அணி இடையேயான அரையிறுதி போட்டி மழையின் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்திய அணி நியூஸிலாந்து அணியுடன் மோதி வருகிறது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அணியின் தொடக்க வீரர்களாக மார்ட்டின் குப்டில், ஹென்றி நிக்கோல்ஸ் களமிறங்கினர். அணியின் தொடக்கமே நியூஸிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளிக்குமாறு 14 பந்துகளுக்கு 1 ரன் மட்டுமே சேர்த்து வெளியேறினார். தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்து வீச்சில் ரன்கள் சேர்க்க நியூஸிலாந்து அணி வீரர்கள் தடுமாறி வந்தனர். இந்நிலையில் 46.1 ஓவர் முடிவில் மழை குறிக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் ரசிகர்கள் பெறும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் ரோஸ் டெய்லர் 67 ரன்னிலும் டாம் லாதம் 3 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

News Counter: 
100
Loading...

Saravanan