தொடரும் மழை அரையிறுதி போட்டி நாளை தானா..?

share on:
Classic

12 வது உலகக்கோப்பை இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நடப்பு உலகக்கோப்பையில் இதற்கு முன் பல லீக் ஆட்டங்கள் மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று நடைபெற்று வந்த அரையிறுதி போட்டியும் மழையால் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்ற காரணங்களால் லீக் ஆட்டங்கள் ரத்தானால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்படும். இது அரை இறுதி போட்டி என்பதால் இதற்கு ரிசர்வ் தினங்கள் உள்ளன. 

இன்று நடந்து வரும் அரை இறுதிப் போட்டி மழை குறுக்கிட்டால் ரத்தானால் இந்த போட்டி நாளை (ரிசர்வ் டே) மாற்றி வைக்கபடும். ஆனால் ரிசர்வ் நாட்களிலும்  போட்டியை நடத்த முடியவில்லை என்றால் புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் அணி இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்படும். புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 15 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. நாளையும் மழையால் ஆட்டம் ரத்தானால் இந்தியா நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.

News Counter: 
100
Loading...

Saravanan