அரையிறுதி போட்டி யாருக்கு சாதகம்..?

share on:
Classic

ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் இன்று மோதுகின்றன. 

மான்செஸ்டரில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்தியா புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தில் நியூசிலாந்து அணியுடன் மோத உள்ளது. இந்த போட்டியில், இந்திய அணியில் மாற்றம் இருக்கலாம் என கூறப்படுகிறது. தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக கேதர் ஜாதவ் இடம்பெறுவார் என்றும், சாஹல் மற்றும் குல்திப் யாதவ் இரண்டு பேரில் ஒருவருக்கு பதிலாக ரவிந்திர ஜடேஜா களமிறங்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் நியூசிலாந்து அணியில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த டிம் சவுதிக்கு பதிலாக லாக்கி பெர்குசனே மீண்டும் களமிறங்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. லீக் ஆட்டத்தின் போது இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுவரை உலகக்கோப்பை போட்டிகளில் இரு அணிகளும் 8 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 4-ல் நியூசிலாந்து அணியும் 3-ல் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. இந்நிலையில் கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

News Counter: 
100
Loading...

Saravanan