இன்று நடைபெற உள்ள போட்டி இந்திய அணிக்கு சாதகமா பாதகமா..?

share on:
Classic

இன்று நடைபெற உள்ள போட்டி இந்திய அணிக்கு சாதகமா பாதகமா..?

இந்தியா, நியூஸிலாந்து அணிகள் இடயேயான முதல் அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் தொடக்கம் முதல் நியூஸிலாந்து வீரர்கள் ரன் சேர்க்க திணறினர். இந்த நிலையில் 46.1 ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால் ஆட்டத்தை தொடங்க முடியாது என நடுவர்கள் அறிவித்தனர். இதனால், இந்த ஆட்டம் இன்றைக்கு (புதன் கிழமை) ஒத்திவைக்கப்பட்டது. 

இந்திய நேரப்படி பிற்பகல் 3.00 மணிக்கு இன்று தொடங்கவுள்ளது. அப்போது, நியூஸிலாந்து அணி மீதமுள்ள 23 பந்துகளை எதிர்கொள்ளும். இந்த போட்டி இந்திய அணிக்கு சாதகமாகவே இறுக்கும். ஏனெனில் ஆட்டம் தொடங்கும் போது மைதானம் பிரஷ்ஷாக இருக்கும். அதனால் ஸ்கோர் செய்வது எளிது. இந்நிலையில் இந்திய அணிக்கே வெற்றி  வாய்ப்பு அதிகமாக உள்ளது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

News Counter: 
100
Loading...

Saravanan