மழையால் தடைபட்ட அரையிறுதி போட்டி தொடங்கும் பட்சத்தில் இந்திய அணி எவ்வளவு ரன் சேர்க்க வேண்டும்..?

share on:
Classic

மழையால் தடைபட்ட அரையிறுதி போட்டி தொடங்கும் பட்சத்தில் இந்திய அணி எவ்வளவு ரன் சேர்க்க வேண்டும்..?

மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்திய அணி நியூஸிலாந்து அணியுடன் மோதி வருகிறது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடி வருகிறது. இந்நிலையில் 46.1 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறிக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ரோஸ் டெய்லர் 67 ரன்னிலும் டாம் லாதம் 3 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியினர் அபாரமாக பந்து வீசி நியூஸிலாந்து அணியை கட்டுப்படுத்தினர். 

இந்நிலையில் மழை நின்று நியூசிலாந்து அணி பேட்டிங்கை தொடராத பட்சத்தில் இந்திய அணியின் இலக்கு என்னவாக இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம். இந்திய அணிக்கு டக் வொர்த் லூயிஸ் முறையில் இலக்கு நிர்ணயிக்கப்படும். அதன்படி இந்திய அணிக்கு அதன் ஓவர்கள் 20-ஆக குறைக்கப்பட்டால் 148 ரன்கள் எடுக்க வேண்டும் ஒருநாள் போட்டியில் இந்த ரன் மிக அதிகமாகும். ஒரு வேளை மழை நீடித்தால் ஐசிசி விதிமுறைப்படி இந்த போட்டி ரத்து செய்யப்பட்டு நாளை போட்டி நடைபெறவே வாய்ப்புள்ளது. இன்று நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து நாளை போட்டி தொடங்கும்.

News Counter: 
100
Loading...

Saravanan