இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை முதல் டெஸ்ட்

share on:
Classic

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை அடிலெய்டில் தொடங்குகிறது.

மூன்று டி20, 4 டெஸ்ட், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. டி20 தொடரில் முதல் ப் ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கு தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால் தொடர் சமனிலையில் முடிந்தது.

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை அடிலெய்ட் மைதானத்தில் தொடங்குகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் நம்பிக்கைக்குறிய தொடக்க வீரராக திகழ்ந்த பிரித்வி ஷாவுக்கு பயிற்சி ஆட்டத்தின் போது பலத்த காயம் ஏற்பட்டதால், அவருக்கு பதிலாக முரளி விஜய் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News Counter: 
100
Loading...

aravind