தோல்விக்கு பழி தீர்த்தது இந்தியா...!

share on:
Classic

முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்திடம் படுதோல்வியை சந்தித்த இந்திய அணி 2-வது போட்டியில் பழி தீர்த்துக் கொண்டது. 

குருனால் அசத்தல்:
இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய பவுலர்களின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்ட நியூஸிலாந்து வீரர்கள் சீராண இடைவெளியில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தபடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். நியூஸிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.

நியூஸிலாந்து பேட்டிங் தரப்பில் கிராண்டோம் அதிகபட்சமாக 50 ரன்கள் (28 பந்துகள், 4 சிக்ஸர், 1 பவுண்டரி) விளாசினார். இந்திய பவுலிங் தரப்பில் குருனால் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

 

கேப்டன் இன்னிங்ஸ்:
159 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது.  நியூஸிலாந்து பவுலர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த கேப்டன் ரோகித் ஷர்மா 29 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இவரைத்தொடர்ந்து ஷிகார் தவான் 30 ரன்களிலும், சங்கர் 14 ரன்களிலும் ஆட்டமிழக்க, ரிஷாப் பண்ட் அதிரடி காட்டி 40 ரன்கள் குவித்தார். இவருடன் மஹேந்திர சிங்(கம்) தோனியும் கைகோர்க்க (20 ரன்கள்), இந்திய அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 
இப்போட்டியின் ஆட்ட நாயகனாக இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் குருனால் பாண்ட்யா தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற வெற்றிக்கணக்கில் தற்போது சம நிலையை அடைந்துள்ளது. 
 

News Counter: 
100
Loading...

mayakumar