சென்னைக்கு 9-வது இடம்...!

share on:
Classic

வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட இந்திய நகரங்களுக்கான பட்டியலில் சென்னை 9-வது இடம் பிடித்துள்ளது. 

2019 - 2035ஆம் ஆண்டு வரை வேகமான பொருளாதார வளர்ச்சி ஏற்படும் வாய்ப்புள்ள இந்திய நகரங்கள் குறித்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள டாப்-10 பட்டியலில் குஜராத்தில் உள்ள சூரத் நகரம் 9.17% ஆண்டு சராசரி பொருளாதார வளர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஆக்ரா (8.58%) இரண்டாமிடத்தையும், பெங்களூரு (8.5%) மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன. 

பட்டியலில் முறையே ஹைதராபாத், நாக்பூர், திருப்பூர் (8.36%), ராஜ்கோட், திருச்சி (8.29%), சென்னை (8.17%) மற்றும் விஜயவாடா உள்ளிட்ட 7 நகரங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. 10 நகரங்களை உள்ளடக்கிய இந்த பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 3 நகரங்கள் இடம்பிடித்திருக்கின்றன. வரும் 2035-ஆம் ஆண்டிற்குள் நாட்டின் மொத்த பொருளாதார உற்பத்தி விகிதம் 17%-ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

News Counter: 
100
Loading...

mayakumar