தோல்விக்கு பழி தீர்க்கும் முனைப்பில் இந்தியா...! வெற்றி வாய்ப்பு பிரகாசம்

share on:
Classic

முதலாவது டி20 போட்டியில் சந்தித்த படுதோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக 2-வது போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி வருகிறது. 

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய பவுலர்களின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்ட நியூஸிலாந்து வீரர்கள் சீராண இடைவெளியில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தபடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். நியூஸிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பேட்டிங் தரப்பில் கிராண்டோம் அதிகபட்சமாக 50 ரன்கள் (28 பந்துகள், 4 சிக்ஸர், 1 பவுண்டரி) விளாசினார். இந்திய பவுலிங் தரப்பில் குருனால் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 159 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பேட்டிங் செய்து வரும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 

 

News Counter: 
100
Loading...

mayakumar