நியூசி.,மண்ணில் வரலாறு படைக்குமா இந்தியா?

share on:
Classic

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் டி-20 தொடர், இன்று தொடங்குகிறது. ஒருநாள் தொடரை தொடர்ந்து இத்தொடரையும் வென்று இந்திய அணி சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, முதலில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகளும் மோதும் முதல் போட்டி, வெலிங்டனில் இன்று தொடங்குகிறது. இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்கு முன்பு, அண்ணிய மண்ணில் இந்திய அணி பங்கேற்கும் கடைசி தொடர் இதுவாகும். 

இதனால், டி-20 கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், நியூசிலாந்துக்கு எதிராக டி-20 போட்டிகளில் இந்திய அணி அதிக தோல்விகளை மட்டுமே சந்தித்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நியூசிலாந்து மண்ணில் முதல்முறை டி-20 தொடரை வென்று இந்திய அணி வரலாறு படைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind