தொடர்ச்சியாக விக்கெட் இழந்து இந்திய அணி தடுமாற்றம்..!

share on:
Classic

நியூசிலாந்துக்கு எதிரான அறையிறுதி போட்டியில் தொடர்ச்சியாக விக்கெட் இழ்ந்து இந்திய அணி தடுமாறி வருகிறது.. 

இந்தியா மற்றும்  நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. மழையின் காரணமாக நேற்றைய ஆட்டம் நிறுத்தப்பட்டு இன்றைக்கு  இன்றைக்கு (புதன் கிழமை) ஒத்திவைக்கப்பட்டது.  இந்நிலையில் இன்று விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 239 ரன்கள் சேர்த்து தனது இன்னிங்ஸை நிறைவு செய்தது 

இதையடுத்து 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே தடுமாறியது. ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோலி ஆகியோர் தலா 1 ரன்னிலேயே ஆட்டமிழந்து வெளியேறினர். 7 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 10 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது.

News Counter: 
100
Loading...

Saravanan