மூன்றாவது டி-20 போட்டியில் வெற்றிவாய்ப்பை இழந்தது இந்தியா

share on:
Classic

இந்தியாவுக்கு எதிரான கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது மற்றும் கடைசி டி-20 போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தனர். இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்தது. விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி போராடி தோற்றது. இதனால், 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை நியூஸிலாந்து அணி கைப்பற்றியது. 

News Counter: 
100
Loading...

vinoth