இந்திய அணி தோல்வி எதிரொலி... டிரெண்டிங்கில் ரசிகரின் ஆவேச வீடியோ..!

share on:
Classic

நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி தோற்றதால் ரசிகர்கள் வருத்தத்தையும் கோபத்தையும் சமூக வளைத்தலங்களில் கொட்டித்தீர்த்து வருகின்றனர்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி நேற்று மான்செஸ்டரில் நடைபெற்றது. முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 239 ரன்கள் சேர்த்து தனது இன்னிங்ஸை நிறைவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ராகுல் - ரோஹித் தலா ஒரு ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளிக்க அவரை தொடர்ந்து வந்த கோலியும் ஒரு ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தோனி-ஜடேஜா நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதில் நம்பிக்கையூட்டும் விதமாக அதிரடியாக ஆடிய ஜடேஜா 4 சிக்ஸ்ர் 4 பவுண்டரி உட்பட 59 பந்துகளுக்கு 77 ரன்கள் குவித்து வெளியேறினார். இவரது விக்கெட் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்பட்ட தோனி எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். இந்நிலையில் 49.3 ஓவரில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கு மிக அருகில் சென்று இந்திய அணி தோல்வியடைந்தது.

இந்நிலையில், இந்திய அணி தோற்றதால் இந்திய ரசிகர்கள் தங்கள் வருத்தத்தையும் கோபத்தையும் சமூக வளைத்தலங்களில் வெவ்வேறு விதத்தில் கொட்டித்தீர்த்து வருகின்றனர். இதனொரு பகுதியாக, ட்விட்டரில் இந்திய ரசிகர் ஒருவர் தனது கோபத்தை வெளிப்படுத்தும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் இந்திய அணி தோற்றதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், தாம் பேச முடியாமல் இருப்பதாகவும் ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளார். இதுவரை அந்த வீடியோ 8.7k லைக்குகளையும்,  3.5k ரீ ட்விட்டும் செய்யப்பட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

Saravanan