உலகக்கோப்பை வரலாற்றை திருத்தி எழுதுமா..? பாகிஸ்தான்..!

share on:
Classic

உலகக்கோப்பை தொடரில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி இன்று நடைபெறுகிறது.

உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருக்கும். அந்த வகையில் இன்று மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1992ஆம் ஆண்டில் இருந்து உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானால் வீழ்த்த முடியாத அணியாகவே இந்திய அணி விளங்கி வருகிறது. இந்த வெற்றியை தொடரும் எண்ணத்தில் இந்திய அணியும், இந்த முறையாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் பாகிஸ்தான் அணியும் களமிறங்குவதால் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே மழையின் குறுக்கீட்டால் 4 போட்டிகள் கைவிடப்பட்ட நிலையில் இந்த போட்டிக்கும் மழையின் அச்சுறுத்தல் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி :

தொடக்க ஆட்டக்காரர் ரோகித் நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுக்கும் வல்லமை கொண்டவர், மிடில் ஆர்டரில் தோனி மற்றும் பாண்டியா நல்ல பாமில் உள்ளனர், பும்ரா,புவனேஸ்வர் குமார், சாஹல் குல்திப்யாதவ் பந்து வீச்சில் தங்கள் பங்களிப்பை அளித்து அணியை வெற்றி பாதைக்கு அளித்து செல்கின்றனர். தொடக்க வீரரான தவான் காயத்தின் காரணமாக ஆட்டத்தில் பங்கேற்க்காதது அணிக்கு சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் தொடக்க வீரராக ராகுல் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தவானுக்கு பதில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் சங்கர் களமிறக்கப்படலாம்.. 

பாகிஸ்தான் அணி : 

நடந்து முடிந்த லீக் தொடரில் இங்கிலாந்துடன் மட்டுமே பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை உடனான போட்டி மழையால் ரத்து செய்யபட்ட நிலையில் வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டியில் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணியின் பேட்டிங் மோசமான நிலையிலையே உள்ளது பஹார் ஜமான், பாபர் அசாம், முகமது ஹபீஸ், சர்ப்ராஸ் அகமது பேட்டிங்கில் ஓரளவு சிறப்பாக ஆடி வருகின்றனர். பின்னர் வரும் வீரர்கள் யாரும் பெரிதாக ரன் ஸ்கோர் செய்வதில்லை. பந்து வீச்சில் ஆமிர் மாயம் செய்கிறார். ஆஸி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது..

News Counter: 
100
Loading...

Saravanan