குல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய இந்தியா வலியுறுத்தல்..!

share on:
Classic

குல்பூஷன் ஜாதவை பாகிஸ்தான் விடுதலை செய்ய மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவுக்கு உளவு பார்த்ததாக இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷ்ன் ஜாதவை கைது செய்த பாகிஸ்தான், அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது. இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த சர்வதேச நீதிமன்றம், குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மறு பரிசீலனை செய்ய பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், இது தொடர்பாக மாநிலங்களவையில் விளக்கமளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், குல்பூஷன் ஜாதவை பாகிஸ்தான் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒட்டுமொத்த உலக நாடுகளின் மன நிலையையும் பிரதிபலிப்பதாக உள்ளதாக அவர் கூறினார்.

 

News Counter: 
100
Loading...

aravind