உலகக்கோப்பை2019: ஆஸி வீரர்களின் பந்து வீச்சை நாளா புறமும் சிதறடித்த இந்திய வீரர்கள்.. விக்கெட் எடுக்க முடியாமல் திணறிய ஆஸி வீர்ரகள்..!

share on:
Classic

தவான் சதத்தால் ஆஸ்திரேலிய அணிக்கு 353 ரன்கள் என்ற அபார இலக்கு......

ஓவல் மைதானத்தில் இன்று ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. தொடக்க வீரர்களாக தவான் மற்றும் ரோஹித் களமிறங்கினர். 
தொடக்க வீரர்களாக களமிறங்கிய வீரர்கள் ஆஸிதிரேலிய அணியின் பந்து வீச்சை பறக்க விட்டனர். ஆஸ்திரேலிய அணியினர் அவர்கள் விக்கெட் எடுக்க  முடியாமல், தினறினர். 
நீண்ட போரட்டதிற்கு பிறகு ரோஹித்தை கோல்ட்டர் நைல் வெளியேற்றினார். அடுத்து களமிறங்கிய கோலியுடன் இணைந்து தனது சதத்தை நிறைவு செய்தார் தவான். பின்னர் வந்த வீரர்களும் அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் விளைவாக 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு அணியின் ஸ்கோர் 352 என்ற இமாலய இலக்கை அடைந்தது. 
அணியில் அதிகபட்சமாக தவான் 117 ரன்களும் கோலி 87 ரன்களும் எடுத்தனர்.. சர்வதேச ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். 3077 ரன்கள் எடுத்து சச்சின் முதல் இடத்தில் உள்ளார்
      

News Counter: 
100
Loading...

Saravanan