பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - மெஹபூபா முஃப்தி

share on:
Classic

இந்தியா பாகிஸ்தான் இடையே உள்ள பதற்றத்தை குறைக்க பாகிஸ்தானுடனும், பிரிவினைவாதிகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “பாகிஸ்தானுடன் எந்த பேச்சுவார்த்தையையும் நடத்தாமல் இருப்பது இரு நாடுகளின் நிலைமையை மேலும் மோசமாக்கும். எனவே உடனடியாக இந்தியா, பாகிஸ்தானுடனும், பிரிவினைவாதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு தீர்வு காணும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இப்படி எந்த பேச்சுவார்த்தையும், ஆலோசனைகளையும் நடத்தாமல் இருப்பது மோதல் போக்கை அதிகரிக்கும் விதமாக அமைகிறது. பாகிஸ்தானுடன் இந்தியா எந்த விதமான உறவைக் கொண்டிருந்தாலும் அதனால் நேரடியாக பாதிக்கப்படுவது ஜம்மு காஷ்மீர் தான். இந்த விரோதப் போக்கு காரணமாக நாங்கள் தான் மோசமாக பாதிக்கப்படுகிறோம் ” என்று தெரிவித்தார். 

News Counter: 
100
Loading...

Ramya