"பயங்கரவாதி ஹபீஸ் சையது கைது பாகிஸ்தானின் நாடகம்"  மத்திய அரசு சாடல்

share on:
Classic

ஹபீஸ் சையத் கைது செய்யப்பட்டிருப்பது பாகிஸ்தானின் நாடகம் என மத்திய அரசு சாடியுள்ளது.

மும்பை குண்டுவெடிப்பு உள்ளிட்ட பயங்கரவாத செயல்களுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பாக இயக்க தலைவர் ஹபீஸ் சையதை சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கக்கோரி இந்திய பல்வேறு முயற்சிகளை எடுத்தது. இதன் விளைவாக ஹபீஸ் சையதை சர்வதேச குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்தது. இருப்பினும், ஹபீஸ் சையத் மீது பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்காதது சர்வதேச நாடுகளை அதிருப்தியடைய செய்தது. 

இந்நிலையில்,  திடீரென ஹபீஸ் சையதை பாகிஸ்தான் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, ஹபீஸ் சையது கைது பாகிஸ்தானின் நாடகம் என சாடியுள்ளது. இம்ரான்கானின் அமெரிக்க பயணத்தையொட்டி அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind