இந்திய அணி தடுமாற்றம்...!

share on:
Classic

அடிலெய்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 250 ரன்கள் குவித்துள்ளது. 

பேட்டிங் தேர்வு:
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இத்தொடரின் முதலாவது போட்டி அடிலெய்டில்  இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

ஆரம்பமே சறுக்கல்:
அணியின் ஸ்கோர் 3-ஆக இருந்தபோது கே.எல்.ராகுல் ஆட்டமிழந்து இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி அளித்தார். இவரைத்தொடர்ந்து,முரளி விஜய் 11 ரன்களிலும், கேப்டன் விராத் கோலி 3 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணியின் தடுமாற்றம் அதிகரித்தது. 

பங்குச்சந்தை போல் சரிந்த விக்கெட்டுகள்:
சற்று தாக்குப்பிடித்து விளையாடிய ரஹானேவும் 13 ரன்களில் அவுட்டாக, அணியின் ஸ்கோர் 41 ரன்களை எட்டுவதற்குள் 4 விக்கெட்டுகள் பறிபோயின. இதன்பின், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டாக சரிந்தன. ’ஹிட்மேன்’ ரோஹித் ஷர்மா 37 ரன்களிலும், ரிஷாப் பாண்ட் 25 ரன்களிலும், ஆல்-ரவுண்டர் அஷ்வின் 25 ரன்களிலும், இஷாந்த் ஷர்மா 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

'பாகுபலி' புஜாரா:
ஒருபுறம், விக்கெட்டுகள் சரிந்துகொண்டிருந்த அதே நேரம் நிலைத்து நின்று விளையாடிய புஜாரா சதமடித்து அசத்தினார். இந்திய அணியை பாகுபலியாக தூக்கி நிறுத்திய புஜாரா 123 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுத் தரப்பில் ஸ்டார்க், ஹேஸல்வுட், கம்மின்ஸ் மற்றும் லயான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஒரு விக்கெட் கைவசம் உள்ள நிலையில் இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸை நாளை தொடரவுள்ளது. 

 

 

News Counter: 
100
Loading...

mayakumar