இந்தியா - ஆஸ்திரேலியா இடையே இன்று 4-வது ஒருநாள் போட்டி..!

share on:
Classic

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 வது ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று நடக்கிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் 2 போட்டியில் இந்திய அணியும், 3 வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4 வது ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும், தொடரை சமன் செய்யும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும் களமிறங்க உள்ளன. இந்திய அணியில் தோனிக்கு எஞ்சிய 2 போட்டிகளிலும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ரிஷப் பாண்ட் களமிறங்க உள்ளார். இதேபோல் காயமடைந்துள்ள முகமது சமிக்கு பதிலாக புவனேஷ்வர்குமாரும், தவானுக்கு பதிலாக லோகேஷ் ராகுலும் களம் இறக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த போட்டியில் 2 சிக்சர் அடித்தால், ஒருநாள் போட்டியில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைப்பார்.

News Counter: 
100
Loading...

Ragavan