உலகக்கோப்பை : இந்தியா, நியூசிலாந்து இடையேயான ஆட்டத்தில் வெற்றி யாருக்கு..?

share on:
Classic

உலகக்கோப்பை லீக் ஆட்டம் இன்று இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. இவ்விரு அணிகளும் சம பலம் வாய்ந்த அணிகளாக உள்ளதால் ஆட்டத்தில் சுவாரசியத்திற்க்கு பஞ்சம் இருக்காது 

இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் நாட்டிங்காம் மைதானத்தில் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் இந்த உலகக்கோப்பை தொடரில் இதற்கு முன் ஆடிய லீக் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணி மூன்று போட்டிகளில் பங்கேற்று மூன்றிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ள்து. இதே போல் இந்திய அணி இரண்டு ஆட்டங்களில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது. இவ்விரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் அய்யமில்லை. இவ்விரு அணிகளும் உலகக்கோப்பையில் 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 3 முறை இந்தியாவும் 4 முறை நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளது..

News Counter: 
100
Loading...

Saravanan