பாகிஸ்தான் அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது இந்தியா..!

share on:
Classic

பாகிஸ்தான் அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது இந்தியா..!

இன்று மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. இந்தியா அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் ராகுல் களமிறங்கினர். அவர்கள் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் விளைவாக இந்திய அணியின் ஸ்கோர் படிப்படியாக உயர்ந்தது. பாகிஸ்தான் வீரர்கள் இந்திய அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்த திணறி வந்த நிலையில் ராகுல் 70 பந்துகளுக்கு 51 ரன்கள் சேர்த்து சோயிப் மாலிக் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார்.  பின்னர் களமிறங்கிய கோலியுடன் இணைந்து நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் ரோஹித் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார்.

140 ரன்களில் ரோஹித் வெளியேற அடுத்து வந்த பாண்டியா 26 ரன்களில் வெளியேறி அணிக்கு ஏமாற்றத்தை அளித்தார். இந்திய அணி 46.4 ரன்னில் 305 ரன்கள் சேர்த்த நிலையில் மழையின் குறுக்கீட்டால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

பின்னர் 15 நிமிட இடைவெளிக்கு பிறகு ஆட்டம் தொடங்கியது. அமீர் வீசிய ஓவரில் 77 ரன்கள் சேர்த்த நிலையில் கோலி ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஜாதவ், விஜய் சங்கருடன் இணைந்து பெரிதாக ரன் ஸ்கோர் செய்யவில்லை. இதனால் அணியின் ரன் ரேட் படிப்படியாக குறைந்தது. ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி  5-விக்கெட்டுகள் இழப்புக்கு 336 ரன்கள் சேர்த்தது.     

 

 
 

News Counter: 
100
Loading...

Saravanan