காஷ்மீர் பிரச்சனையில் 3வது நாட்டின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது - பிபின் ராவத் உறுதி

share on:
Classic

காஷ்மீர் பிரச்சனையில் 3வது நாட்டின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் வருடாந்திர செய்தியாளர் சந்திப்பில் ராணுவ தளபதி பிபின் ராவத் கலந்து கொண்டு செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, இந்தியா அமைதியை மட்டுமே விரும்புவதாகவும், காஷ்மீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் கூறினார்.

ஆனால், பாகிஸ்தான் அத்துமீறலை கைவிட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இந்த பிரச்சனையில் 3வது நாட்டின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று கூறினார். நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தாலும், ராணுவத்தில் ஆண் ஓரினச்சேர்க்கைக்கு அனுமதி கிடையாது என்றும் பிபின் ராவத் தெரிவித்தார்.

சீனாவுடனான எல்லைப் பிரச்சனையையும் ராணுவம் சிறப்பாக கையாண்டு வருவதாக அவர் கூறினார்.

News Counter: 
100
Loading...

sasikanth