இந்தியா மீண்டும் வென்றுவிட்டது : பிரதமர் மோடி டிவிட்டரில் பெருமிதம்

share on:
Classic

இந்தியா மீண்டும் வென்றுவிட்டது என்று பிரதமர் மோடி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியதிலிருந்தே பாஜக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. பீகார், உத்திரப்பிரதேசம், டெல்லி, ஹிமாச்சல் பிரதேசம், அருணாச்சல் பிரதேசம், குஜராத், மகாராச்டிரா உட்பட நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. மோடி, அமித்ஷா போன்ற தலைவர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். மதியம் 3 மணி நிலவரப்படி பாஜக 345 இடங்களிலும், காங்கிரஸ் 91 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. மற்ற கட்சிகள் 106 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். “ ஒன்றாக வளர்வோம், ஒன்றாக செழிப்பான வாழ்க்கையை மேற்கொள்வோம், ஒன்றாக இணைந்து வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்குவோம். இந்தியா மீண்டும் வெற்றிபெற்றுவிட்டது” என்று மோடி தெரிவித்துள்ளார்.
 

 

News Counter: 
100
Loading...

Ramya