உலகக்கோப்பை : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா..!

share on:
Classic

உலகக்கோப்பை : இதுவரை இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆறு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி வாகை சூடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று சரித்திரத்தை மாற்றுமா பாகிஸ்தான்..!

சிட்னி, 1992: இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் உலகக்கோப்பை ஆட்டத்தில் முதல் முறையாக எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் அதிக பட்சமாக இந்திய அணியின் அஜய் ஜடேஜா 46 ரன்களும் சச்சின் டெண்டுல்கர் 54 ரன்களும் சேர்த்தனர். ஆட்டநேர இறுதியில் 7 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 216 ரன்கள் சேர்த்து தனது ஆட்டத்தை நிறைவு செய்தது. பாகிஸ்தான அணி 173 ரன்களுக்குள் தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அமர் சோஹைல் 62 ரன்கள் சேர்த்தார். பின்னர் வந்த வீரர்கள் செற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா,..

 

பெங்களூரு, 1996: இந்தியா 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய நவ்ஜோத் சிங் சித்து அதிக பட்சமாக 93 ரன்களை பதிவு செய்தார். பின்னர் வந்த வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 287 ரன் சேர்த்தது. அஜய் ஜடேஜா, வஜார் யூனிஸின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். 25 பந்தில் 45 ரன்கள் விளாசினார். இதன் காரணமாக இந்தியா அணி ,287 ரன்கள் சேர்த்தது. 288 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அமர் சோஹைல், சயீத் அன்வர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் முறையே 55, 48 ரன்கள் எடுத்து வெளியேற, பின்னர் வந்த வீரர்கள் சொற்ப்ப ரன்களில் வெளியேறினர். இந்திய அணியில் வெங்கடேஷ் பிரசாத் 45 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுனையாக இருந்தார். 39 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா...

மான்செஸ்டர், 1999: இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

 
கார்கில் போர் நடந்த நேரத்தில் இரு அணிகளும் உலகக்கோப்பையை சந்தித்தன. அந்நிலையில் 2 அணிகள் ஒரே மைதானத்தில் சந்தித்தபோது அங்கு பதட்டங்கள் அதிகமாகவே காணப்பட்டன, அன்றைய ஆட்டதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அணியில் அதிக பட்சமாக டிராவிட் 61 ரன்களும் அசாருதீன் 59 ரன்னும் சேர்த்தனர். இந்திய அணி 50 ஓவர் முடிவில் 65 விக்கெட் இழப்பிற்கு 227 ரன் சேர்த்து தனது இன்னிங்க்ஸை நிறைவு செய்தது. வெங்கடேஷ் பிரசாத் பாகிஸ்தானுக்கு எதிராக அன்றைய ஆட்டத்தில் 27 ரன்கள் மட்டும் விட்டு கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தி தான் ஒரு சிறந்த பந்து வீச்சாளர் என்பதை நிறுபித்தார். பாகிஸ்தான் அணி 45.3 ஓவரில் 180 ரன்களை மட்டும் சேர்த்து 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வி கண்டது.

செஞ்சுரியன், 2003: இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி 

பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. சயீத் அன்வர் சதத்தில் அன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 273 எனும் இமாலய ஸ்கோரை இந்திய அணிக்கு எதிராக பதிவு செய்தது.. 274 என்ற இமாலய இலக்கை அடைய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சச்சின் மற்றும் சேவாக் களம் கண்டனர், அதில் சேவாக் 21 ரன்களில் பெவிலியன் திரும்பி அணிக்கு ஏமாற்றத்தை அளித்தார், அடுத்து வந்த அணியின் கேப்டன் கங்குலி LBW முறையில் டக் அவுட்டில் வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். சச்சின் 2 ரன்களில் தனது சதத்தினை தவற விட்டார். அன்றைய ஆட்டத்தில் அதிகபட்சமாக 98 ரன்கள் சேர்த்த சச்சின் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்படார். இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்தது

மொஹாலி, 2011 : இந்தியா 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி 

டாஸ் கைப்பற்றிய இந்தியா அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. தொடக்க வீரராக சேவாக் மற்றும் சச்சின் களமிறங்கினர். சேவாக் 38 ரன்களில் LBW முறையில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற சச்சின் நிலைத்து ஆடி 85 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை 260-க்கு உயர்த்தினார். 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 260 ரன்கள் சேர்த்து தனது ஆட்டத்தை நிறைவு செய்தது.. பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 231 ரன்கள் மட்டுமே சேர்த்து 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இலங்கையுடன் நடந்த இறுதி போட்டியில் வென்று இந்தியா வெற்றி கோப்பையை கைப்பற்றியது. அந்த ஆண்டு உலகக்கோப்பையோடு இந்திய நட்சத்திர வீரர் சச்சின் தனது ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடிலெய்ட், 2015 : இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

2015 ஆம் ஆண்டு தோனி தலமையிலான அணி உலகக்கோப்பையில் களமிறங்கியது. அந்த ஆட்டத்தில் கோலி 107 ரன் சேர்த்து அணியை அதிக ரன்களை நோக்கி எடுத்து சென்றார். இந்திய அணியில் அதிக பட்சமாக கோலி 107 ரன்னும் ரெய்னா 74 ரன்னும் தவான் 73 ரன்னும் சேர்த்தன் விளைவாக, இந்தியா 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 300 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான அணியில் சோஹைல் கான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பித்தக்கது. பின்னர் வந்த பாகிஸ்தான் அணி 47 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 224 ரன்கள் மட்டுமே எடுத்து 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் பணிந்தது..

இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதிய ஆறு உலகக் கோப்பை போட்டிகளில் 2003 ஆம் நடைபெற்ற போட்டியில் மட்டுமே பாகிஸ்தான் முதலில் பேட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது..

News Counter: 
100
Loading...

Saravanan