உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி..!!

share on:
Classic

நாளை உலகக்கோப்பை தொடங்க இருக்கும் நிலையில் நேற்று சோபியா கார்டன்ஸ், கார்டிஃப் மைதானத்தில் இந்தியாவுக்கும் வங்காள தேசத்திற்க்கும் இடையே நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

முதலில் டாஸ் வென்ற வங்காள தேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது, முதலில் களம் இறங்கிய இந்திய அணியின் வீரர்கள் யாரும் பெரிதாக ரன் எடுக்கவில்லை வந்த வேகத்திலேயே அவுட் ஆகி ஏமாற்றத்தை அளித்தனர். பின்னர் களம் இறங்கிய இந்திய அணி கேப்டன் கோலி, சைஃபுதீன் பந்து வீச்சில் 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். பின்னர் களம் இறங்கிய தோனி மற்றும் ராகுல் நிதானமாக ஆடி தங்கள் சதத்தை பூர்த்தி செய்தனர். இந்நிலையில் தோனி  78 பந்துகளுக்கு 113 ரன்கள் எடுத்த நிலையிலும் ராகுல் 99 பந்துகளுக்கு 108 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் இந்திய அணி 359 ரன்கள் குவித்தது.

பின்னர் களம் இறங்கிய வங்காள தேச வீரர்கள் யாரும் பெரிதாக ரன் எதுவும் சேர்க்கவில்லை அணியின் வீரர் முஷ்பிகுர் ரஹிம் மட்டும் 94 பந்துகளுக்கு 90 ரன்க்ள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 264 ரன்கள் எடுத்த நிலையில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

News Counter: 
100
Loading...

Ramya