இந்தியன் 2 பட்ஜெட் : இயக்குனர் ஷங்கர், லைகா நிறுவனம் இடையே மோதல்..?

share on:
Classic

இந்தியன் 2 படத்தின் பட்ஜெட் குறித்து இயக்குனர் ஷங்கருக்கும் லைகா நிறுவனத்திற்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய சினிமா வரலாற்றில் அதிக பட்ஜெட்டில் உருவான படம் என்ற இடத்தை 2.0 படம் பிடித்தது. ஷங்கர் இயக்கத்தில் லைகா ப்ரொட்க்‌ஷ்னஸ் தயாரித்து, ரஜினி, அக்‌ஷய் குமார் நடித்திருந்த இந்த படம் சுமார் ரூ. 543 கோடி செலவில் உருவானது. 2.0 படத்தை தொடர்ந்து ஷங்கர் இந்தியன் 2 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். 23 ஆண்டுகளுக்கு பிறகு கமல் ஹாசனுடன் இணைந்துள்ளார் ஷங்கர். 

இந்நிலையில் இந்தியன் 2 பட்ஜெட் குறித்து ஷங்கர் லைகா ப்ரொட்க்‌ஷன்ஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இறுதிசெய்யப்பட்ட பட்ஜெட்டிற்குள் படத்தை எடுக்க வேண்டும் என்று லைகா நிறுவனம் கேட்டு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஷங்கர் தனது படத்தின் பிரம்மாண்டத்தை காண்பிக்க அதிக அளவு செலவு செய்வார் என்பது அனைவரும் அறிந்ததே. 2.0 படத்தின் மூலம் எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்காததால் லைகா நிறுவனம் இந்தியன் 2 படத்திற்கு அதிகளவு செலவு செய்ய முடியாத நிலையில் இருப்பதாக கூறுகிறது. இது இரு தரப்பினரிடையே மோதல் போக்கை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் இருந்து முதலீடு செய்பவர்களை ஷங்கர் தேடுவதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்தியன் 2 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

News Counter: 
100
Loading...

Ramya