வங்கிக்கடன் மோசடி : 17 பேருக்கு 3 ஆண்டு சிறை..!

share on:
Classic

வங்கிக்கடன் மோசடி வழக்கில் இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் உள்பட 17 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையில் உள்ள 7 தனியார் நிறுவனங்கள் கட்டுமான பணிக்காக, அண்ணாசாலை, எழும்பூர், திருமங்கலம், கோடம்பாக்கம், ஆழ்வார்பேட்டை உள்பட 6 இந்தியன் வங்கி கிளைகளில் கடந்த 1995 - 1996ஆம் ஆண்டில் ரூ.30 கோடி கடன் பெறப்பட்டது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக விசாரணை நடத்திய சி.பி.ஐ.., முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் வங்கி கிளை மேலாளர்கள், தனியார் நிறுவன உரிமையாளர்கள் உள்பட 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம், இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்பட 17 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

News Counter: 
100
Loading...

Ragavan