3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா ஏமாற்றம்... கிடைக்குமா உலகக்கோப்பை?...

share on:
Classic

2015-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி முதன்முறையாக சொந்த மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்துள்ளது. 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே 4 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் 2-2 என்ற கணக்கில் தொடர் சமனில் இருந்தது. இதையடுத்து, தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் 5-வது மற்றும் கடைசி போட்டியானது பகலிரவு ஆட்டமாக டெல்லியில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சீராண இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியாவின் அதிகபட்ச ரன் குவிப்பு மற்றும் இந்திய அணியின் பந்துவீச்சு விவரம் பின்வருமாறு, 

ஆஸ்திரேலிய வீரர்கள் ரன்கள்
கவாஜா 100
ஹான்ஸ்கம் 52
ரிச்சர்ட்சன் 29
ஃபிஞ்ச் 27
இந்திய பவுலர்கள் விக்கெட்டுகள்
புவனேஷ்வர் குமார் 3 (48)
ஜடேஜா 2 (45)
ஷமி 2 (57)
குல்தீப் யாதவ் 1 (74)

 

273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்த இந்திய அணி அடுத்தடுத்து சொதப்பியதால் கோப்பையை வெல்லும் வாய்ப்பு பறிபோனது. இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 237 ரன்கள் மட்டுமே எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது. இந்தியாவின் அதிகபட்ச ரன் குவிப்பு மற்றும் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு விவரம் பின்வருமாறு, 

இந்திய வீரர்கள் ரன்கள்
ரோகித் ஷர்மா 56
புவனேஸ்வர் குமார் 46
கேதார் ஜாதவ் 44
ரிஷாப் பண்ட்  16
விஜய் சங்கர் 16
ஆஸ்திரேலிய பவுலர்கள் விக்கெட்டுகள்
ஸாம்பா 3 (46)
ஸ்டோய்னிஸ் 2 (31)
கம்மின்ஸ் 2 (38)
ரிச்சர்ட்சன் 2 (47)
லயான் 1 (34)

 

இப்போட்டியின் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் உஸ்மான் கவாஜாவிற்கு வழங்கப்பட்டது. 

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 3-2 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. உலகக்கோப்பை தொடர் நெருங்கியுள்ள நிலையில் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியிருப்பது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது. மறுபுறம், கடந்த 2015-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்திருப்பது ஏமாற்றம் அளித்துள்ளது. 

News Counter: 
100
Loading...

mayakumar