புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் அஞ்சலி..!!

share on:
Classic

ராஞ்சி போட்டியில் புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்திய அணி வீரர்கள், ராணுவ தொப்பியுடன் களமிறங்கியுள்ளனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த துணை ராணுவ வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மரியாதை செலுத்த பிசிசிஐ முடிவு செய்தது. அதன்படி, இப்போட்டியில், இந்திய வீரர்கள் அனைவரும் ராணுவப்படையின் தொப்பியை அணிந்தபடி களமிறங்குவார்கள் என அறிவித்தது. இதனையடுத்து, வீரர்களுக்கு ராணுவ தொப்பியை உள்ளூர் வீரரான தோனி வழங்கினார். மேலும், இந்திய வீரர்கள் இன்றைய போட்டியின் ஊதியத்தை, தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

Ragavan