இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு பிடிவாரண்ட்..!!

share on:
Classic

பல்வேறு சர்ச்சையில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு பிடிவாரண்ட் வழங்கி கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான் கடந்த 2018-ஆம் ஆண்டு ஷமி மீதும் அவரது குடும்பத்தார் மீது பல்வேறு புகார்களை போலீஸில் புகார் அளித்துள்ளார். முகமது ஷமியின் மூத்த சகோதரர் மீது பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் என்றும் கொலை செய்ய முயன்றார் என்றும் புகார் தெரிவித்திருந்தார். மேலும் முகமது ஷமிக்கு பல்வேறு பெண்களிடம் தொடர்பு இருப்பதாக அவர் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரையடுத்து பிசிசிஐ விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையால் தற்காலிகமாக ஊதிய ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது. மேலும்  விசாரணையில் எந்த குற்றச்சாட்டுகள் நிறுபனம் ஆகாதததால் மீண்டும் ஊதிய ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையானது நீதிபதி சுப்தரா முகர்ஜி முன்பு விசாரணைக்கு வந்தது.

இதில் முகமது ஷமி வெளிநாட்டில் இருப்பதால் 15 நாட்களில் நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும், அவரது சகோதரரை உடனடியாக கைது செய்ய போலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது கைது வாரண்ட் நீதிமன்றத்தை வழங்கப்பட்டதையடுத்து ஆப்பிரிக்கா தொடருக்கு முகமது ஷமியை தேர்வு செய்யலாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan