இந்திய தேர்தல் நேர்மையாக நடத்தப்பட்டது : அமெரிக்கா கருத்து

share on:
Classic

இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், நடைபெற்ற தேர்தல்களின் நியாயத்தன்மை மற்றும் நேர்மை குறித்து தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

இந்திய தேர்தல்கள் நேர்மையாக நடத்தப்பட்டது என்று தங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஆர்டகஸ் கூறியுள்ளார். இந்தியத் தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்படுவதால், மற்ற நாடுகளுக்கு அனுப்புவது போல் இந்தியாவுக்கு தேர்தல் பார்வையாளர்களை நாங்கள் அனுப்புவதில்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், இந்திய அரசுடன் வலுவான உறவுகளை அமெரிக்கா வைத்துள்ளதாகவும், அனைத்து விவகாரங்களிலும் இந்தியாவுக்கு முழு ஒத்துழைப்பை தங்கள் அரசு வழங்கும் என்று உறுதி அளித்த அவர், மனித வரலாற்றிலேயே ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவாக இந்திய தேர்தல் விளங்குவதும், இதனை மக்கள் அமைதியுடன் நடத்திக் கொடுப்பதும் மகிழ்ச்சியளிக்கிறதாகவும், இந்திய மக்களை நாங்கள் பாராட்டுகிறோம் எனவும் அதில் மகிழ்ச்சி தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ragavan