பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுத்த இந்திய ரசிகர்கள்..!

share on:
Classic

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆட்டங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான ஆட்டமும் ஒன்று. அதற்கு முக்கிய காரணம் பாகிஸ்தான் நடந்து முடிந்த 6 உலகக்கோப்பையில் ஒரு முறை கூட இந்தியாவை வென்றதில்லை என்பது தான். 

வரும் 16-ஆம் தேதி ஓல்ட் டிராபோர்ட் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் நடைபெற உள்ளது. இதற்கிடையில் பாகிஸ்தானில் ஒரு சர்ச்சை வீடியோ ஒன்று வெளியானது. அதில் அபிநந்தனை போல் தோற்றத்தில் உள்ள ஒருவரை வைத்து மிகவும் தவறாக சித்தறித்து ஒரு விளம்பரம் வெளிய்டப்பட்டது. இதற்கு பல கண்டனங்கள் எழுந்தன.

 
இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஒரு பதிலடி வீடியோ வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் பாக் அணி ஜெர்ஸி அணிந்த ஒருவர் இந்திய அணி ஜெர்ஸி அனிந்திருக்கும் ஒருவருக்கு கர்ச்சிப் கொடுக்கிறார். அதற்கு அவர் எனக்கு ஏன் கர்ச்சிப் கொடுக்கிறீர்கள் என கேட்டதற்கு போட்டியில் தோற்றதும் முகத்தில் மூடி கொள்ளுங்கள் என சொல்கிறார். மேலும் கிண்டல் செய்யும் விதமாக உரையாடல் தொடர்கிறது. இந்த உரையாடல் அனைத்தும் ஒரு சலூன் கடையில் நடக்கிறது.

இதை கவனித்த சலூன் கடைக்காரர் பாக் . ஜெர்ஸி அனிந்தவருக்கு அபிநந்தனை போல் மீசை வைத்து விடுகிறார். அதை பார்த்து அதிச்ச்சியடைந்த அவரிடம் இந்திய ஜெர்ஸி அணிந்த வீரர் இந்த கர்ச்சிப் வைத்து நீங்கள் முகத்தை மூடிக்கொள்ளுங்கள் என கூறுகிறார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரல் ஆகிறது.

 

News Counter: 
100
Loading...

Saravanan