இலங்கை அணியின் முன்னாள் கேப்டன், அமைச்சர் மீது பாலியல் புகார்

share on:
Classic

இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், அந்நாட்டின் தற்போதைய பெட்ரோலியத்துறை அமைச்சருமான அர்ஜுனா ரணதுங்கா மீது இந்திய விமானப்பணிப்பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளார்.

தற்போது சமூக வலைதளங்களில் "Me Too" என்ற Hashtag டிரண்டிங்கில் இருக்கிறது. இந்த Hashtag-இல் பல்வேறு பெண்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், அந்நாட்டின் தற்போதைய பெட்ரோலியத்துறை அமைச்சருமான அர்ஜுனா ரணதுங்கா மீது இந்திய விமானப்பணிப்பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த 1998-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கொல்கத்தாவில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்ததாகவும், அப்போது ஆட்டோகிராஃப் வாங்கச் சென்ற தன்னிடம் ரணதுங்கா, தவறாக நடந்துகொண்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், இதுகுறித்து விடுதி நிர்வாகிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அந்தப்பெண் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

sasikanth