'FIFA' தரவரிசையில் இந்திய அணிக்கு எந்த இடம்...? சதத்தில் கூட இடமில்லை

share on:
Classic

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான 'FIFA' வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் முதல் 100 அணிகளில் ஒன்றாகும் வாய்ப்பை தவறவிட்டது இந்திய அணி.

இந்தியாவில் கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்னும் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த வருடம் இந்திய கால்பந்து அணி கேப்டன் 'சுனில் சேத்ரி' ஒரு விடியோவை வெளியிட்டிருந்தார். கிரிக்கெட்டுக்கு அளிப்பது போல் மற்ற விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று இந்திய மக்களுக்கு முன் கோரிக்கை வைத்தார். அதற்கு பின்பு தான் மக்களின் கவனம் இந்திய கால்பந்து அணியின் மீது திரும்பியது. 

தொடர்ந்து கடினமாக உழைத்த இந்திய அணி கடந்தாண்டு மார்ச் மாதம் வெளியான தரவரிசை பட்டியலில் உலகின் முதல் 100 அணிகளில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டது. 21 ஆண்டுகள் கழித்து முதல் 100 இடங்களை பிடித்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. ஆனால் நடந்து முடிந்த ஆசிய கால்பந்து போட்டிகளில் ஏற்பட்ட 3 தொடர் தோல்விகளால் இந்திய அணி மூன்று இடங்கள் பின்னோக்கி நகர்ந்து. 1,219 பாய்ண்ட்டுகளோடு 103-வது இடத்தில் இருக்கிறது. இதற்கு முன்பு 1996-ம் ஆண்டு 96-வது இடத்தை பிடித்தது தான் அந்த அணியின் பெரிய சாதனையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

youtube