அமெரிக்க பாலைவனத்தில் உயிரிழந்த இந்திய சிறுமி : தாய் தண்ணீர் தேடி சென்ற போது நேர்ந்த சோகம்..

share on:
Classic

அமெரிக்காவின் அரிசோனா பாலைவனத்தில் அதீத வெப்பம் காரணமாக 6 வயது இந்திய சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் ஆயிரக்கணக்கான ஆப்ரிக்க மக்களும், ஆசியாவை சேர்ந்த மக்களும் அமெரிக்காவில் நுழைய கடினமான பயணத்தை மேற்கொள்கின்றனர். 

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் உள்ள பாலைவனத்தில், அமெரிக்க எல்லைக்கு 50 மைல்கள் உள்ள தொலைவில் கடத்தலக்காரர்கள் 5 இந்தியர்களை விட்டு சென்றுள்ளனர். அங்கு கடந்த புதன்கிழமை அதிகபட்சமாக 42டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. அந்த குழுவில் இருந்த 6 வயது குருபிரீத் கவுர் என்ற சிறுமிக்காக, அவரது தாய் தண்ணீர் தேடி சென்றுள்ளார். ஆனால் திரும்ப வந்து பார்த்த போது தனது மகளை காணவில்லை. 4 மணி நேரத்திற்கு பின்னர், எல்லை காவல்துறையினர் 1.6 மைல் தூரத்தில் சிறுமியின் உடலை கண்டுபிடித்தனர். 

அதிக வெப்பம் காரணமாக சிறுமி இறந்ததாக மருத்துவர்கள் தெவித்தனர். கவுர் வெப்பம் காரணமாக உயிரிழக்கும் 2-வது சிறுமியாவார். தெற்கு அரிசோனா பகுதியில் மே 30 வரை 58 பேர் உயிரிழந்துள்ளதாக பதிவுகள் உள்ளன. கடந்த ஆண்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 127-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.  

News Counter: 
100
Loading...

Ramya