இந்திய உளவுத்துறை அளித்த தகவல் : இலங்கை தாக்குதலில் தொடர்புடைய மேலும் இருவர் கைது..!!

share on:
Classic

இலங்கை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜக்ரான் ஹஷீமுடன் தொடர்புடைய இருவர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இலங்கையில் கடந்த 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜக்ரான் ஹஷினின் நெருங்கிய உறவினர் மற்றும், அவரின் நண்பர் ஆகிய இருவரும் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக இந்திய உளவுத்துறை அளித்த தகவலின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சவூதி அரேபிய தீவிரவாத எதிர்ப்பு அமைப்புடன், இந்திய பாதுகாப்பு அமைப்புக்கள் ஏற்கனவே தொடர்பில் இருந்ததாகவும், இலங்கை தாக்குதல் தொடர்புடைய ஐஎஸ் அமைப்பினர் அங்கு உள்ளனரா என்பதை கண்டறிய ஒரு குழுவினர் சவூதி சென்றனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். 

இலங்கை தாக்குதல் தொடர்பாக இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்களையும் தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

News Counter: 
100
Loading...

Ramya