இங்கிலாந்தில் சிக்கி தவிக்கும் இந்திய வீரர்கள்..!

share on:
Classic

இங்கிலாந்தில் சிக்கி தவிக்கும் இந்திய வீரர்கள்..!

இந்திய அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து அரையிறுதியோடு உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது. ஆனால் இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்கள் உள்ளிட்டோர் மான்செஸ்டரில் தங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்நிலையில், சரியான நேரத்திற்கு டிக்கெட் ஏற்பாடு செய்ய தவறியதாக பி.சி.சி.ஐ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்திய கிரிக்கெட் வீரர்கள் வியாழக்கிழமை மான்செஸ்டரில் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து வெளியேறிவிட்டனர், ஆனால் ஞாயிற்றுக்கிழமை வரை இங்கிலாந்தில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

"பெரும்பாலானவர்கள் ஜூலை 14 வரை மான்செஸ்டரில் இருப்பார்கள், பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு விடுவார்கள். அவர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது ”என்று பி.சி.சி.ஐ.யின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஒரு சில வீரர்கள் இந்தியாவுக்குத் திரும்பத் தயாராக இருக்கிறார்கள் ​​இன்னும் சிலர் இரண்டு வார இடைவெளிக்கு பிறகு திரும்பி வருவார்கள் அல்லது வெவ்வேறு இடங்களுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

News Counter: 
100
Loading...

Saravanan