ஏற்றத்துடன் முடிந்தது இன்றைய பங்குச்சந்தை..!

share on:
Classic

ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடனேயே முடிவடைந்தது. 

இன்று காலை நேர தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 73 புள்ளிகள் உயர்ந்து 36,140 புள்ளிகளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. மாலை நேர மூடிவில், வர்த்தகம் மாலை நேர முடிவில் 378 புள்ளிகள் உயர்ந்து 36,442 புள்ளிகளுடன் வர்த்தகம் முடிவுக்கு வந்தது.

இதே போல், இன்று காலை நேர தொடக்கத்தில் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 36 புள்ளிகள் உயர்ந்து 10,900 புள்ளிகளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. மாலை நேர முடிவில் 123 புள்ளிகள் உயர்ந்து 10,987 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.

தேசிய பங்குச்சந்தை வர்த்தகத்தில் டாடா மோட்டார்ஸ், இந்துஸ்தான் பெட்ரோலியம், பிபிசிஎல், ஆக்ஸிஸ் பேங்க், ஹீரோ மோட்டார் கார்பரேஷன் உள்ளிட்ட நிறுவன பங்குகளின் மதிப்பு ஏற்றத்தை கண்டன. விப்ரோ, டெக் மஹேந்திரா, சிப்லா, டிசிஎஸ், எஸ் பேங்க் உள்ளிட்ட நிறுவன பங்குகளின் மதிப்பு சரிவை சந்தித்தன.

News Counter: 
100
Loading...

Ragavan